Sunday, October 10, 2010

French Fry

தேவாயான பொருட்கள்
  1. இரண்டு உருளை கிழங்கு பெரியது
  2. தேவையான அளவு உப்பு 
  3. தேவையான அளவு எண்ணெய்

STEP #1:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
உருளை கிழங்கை தோல் சீவீ  வெட்டி கொதிக்கும் தண்ணீரில் உடன் போடவும்.


2. ஒரு நிமிடம் கழித்து கிழங்கை எடுத்து சாதாரண நீரில் போடவும்.


3. வேண்டிய போது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.




சிக்கன் 65

தேவையான பொருட்கள்

  1. எலும்பில்லாத சிக்கன் - ஒரு கப்
  2. சிக்கன் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
  3. இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  4. கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
  5. பூண்டு - 3 பல்
  6. கறிவேப்பிலை - ஒரு கொத்து
  7. தயிர் - கால் கப்
  8. உப்பு - கால் தேக்கரண்டி
  9. எண்ணெய் - கால் கப்

STEP #1:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

STEP #2:

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

STEP #3:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு 
மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.

STEP #4:

வேறொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

STEP #5:

தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 தயார். இந்த சுவையான சிக்கனை செய்து காட்டியவர் செல்வி. ஸ்ரீதுர்கா அவர்கள்