தேவையான பொருட்கள்
- எலும்பில்லாத சிக்கன் - ஒரு கப்
- சிக்கன் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
- இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
- பூண்டு - 3 பல்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- தயிர் - கால் கப்
- உப்பு - கால் தேக்கரண்டி
- எண்ணெய் - கால் கப்
STEP #1:
எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
STEP #2:
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு அதில் சிக்கன் பவுடர், இஞ்சி பூண்டு விழுது, கேசரி பவுடர், தயிர், உப்பு சேர்த்து பிசறி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
STEP #3:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு
மொறுமொறுவென்று பொரித்து எடுக்கவும்.
STEP #4:
வேறொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
STEP #5:
தாளித்தப் பொருட்களை பொரித்த சிக்கன் மீது தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் 65 தயார். இந்த சுவையான சிக்கனை செய்து காட்டியவர் செல்வி. ஸ்ரீதுர்கா அவர்கள்
No comments:
Post a Comment